போக்குவரத்து கழக காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல்
கடலூர்: கடலூர் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான நேர்காணல் நடந்தது. தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 8ம் தேதி வரை கண்டக்டர், டிரைவர், தொழிற்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு கடலூர் மண்டலத்தில் 5,800 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த 300 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அதில் 253 பேர் பங்கேற்றனர். நேற்று காலை 10:00 மணி முதல் நேர்காணல் துவங்கியது. நேர்காணல் பகுதி பகுதியாக வரும் 23ம் தேதி வரை நடத்தப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.