மதுரை மாவட்ட விளையாட்டு செய்திகள்
தடகள வீராங்கனைகள்: மதுரை காமராஜ் பல்கலை கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளில் மதுரை லேடிடோக் கல்லூரி வீராங்கனைகள் புதிய சாதனை படைத்தனர். 100 மீட்டர் ஓட்டத்தை 2.17 வினாடிகளில் கடந்தும், 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தை 1.06.61 வினாடிகளில் கடந்தும் மாணவி சுகன்யா சாதனை படைத்தார். நீளம் தாண்டுதலில் உமாமகேஸ்வரி 5.37 மீட்டர் நீளம் தாண்டினார். 4க்கு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தை சுகன்யா, அபிநயா, ஸ்வேதா, கார்த்திகா 4.05.50 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வர் மெர்ஸி புஷ்பலதா, உடற்கல்வி இயக்குனர் சாந்தமீனா பாராட்டினர். மாநில குங்பூ: புதுச்சேரியில் மாநில அளவிலான திறந்தவெளி குங்பூ போட்டிகள் நடந்தன. இதில் மதுரை ஸ்ரீ அரபிந்தோ மீரா பள்ளி மாணவர்கள் 12 பதக்கங்களை வென்றனர். தலைமை பயிற்சியாளர் முரளி பாராட்டினார். சாதனை மாணவி: மதுரையில் நடந்த மாநில அளவிலான குடியரசு தினவிழா தடகளப் போட்டியில் மதுரை கேப்ரன் ஹால் பள்ளி மாணவி சரண்யாதேவி வெற்றி பெற்றார். 19 வயது பிரிவில் தடைதாண்டும் போட்டியில் தங்கப்பதக்கமும், மும்முறை தாண்டும் போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்றார். பள்ளித் தலைவர் ஜோசப், தாளாளர் மார்த்தாண்டன் தாமஸ், தலைமையாசிரியை சத்யவதி கலாராணி, ஓ.சி.பி.எம்., பள்ளி தலைமையாசிரியை லீலா மனோகரி, உடற்கல்வி இயக்குனர் அருள் ஜீவராஜ், உடற்கல்வி ஆசிரியை காருண்யமேரி, ரெபேக்காள் பாராட்டினர். வாள்சண்டை போட்டி: சேலத்தில் நடந்த மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின வாள்சண்டை போட்டிகளில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர். மாணவிகள் சுஸ்மிதாஸ்ரீ வெள்ளி பதக்கம், தெய்வசுந்தரி, ஸ்ருதி, நந்தினி, ஜோதி, கார்த்திகா வெண்கல பதக்கங்களை வென்றனர். பள்ளிச் செயலாளர் நடராஜன், தலைமையாசிரியை தமிழ்ச்செல்வி, உதவித் தலைமையாசிரியை அரசி, உடற்கல்வி இயக்குனர் வசந்தி, உடற்கல்வி ஆசிரியை மகாலட்சுமி பாராட்டினர்.