டில்லியில் தேசிய அறிவியல் கருத்தரங்கம்
புதுச்சேரி: டில்லியில் நடக்கும் தேசிய அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்க இமாக்குலேட் பள்ளி மாணவி எழிலரசி தேர்ச்சி பெற்றுள்ளார்.புதுச்சேரி கல்வித்துறை-பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் துறை, தொழில் நுட்ப அருங்காட்சியகம் சார்பில் முத்தரையர்பாளையம் இளங்கோவடிகள் அரசு மேல் நிலைப் பள்ளியில் மாநில அறிவியல் கருத்தரங்க போட்டி நேற்று நடந்தது. போட்டியை பள்ளி துணை முதல்வரும், ஒருங்கிணைப்பாளருமான குலோத்துங்கன் துவக்கி வைத்தார். நடுவர்களாக, முருங்கபாக்கம் சத்தியமூர்த்தி அரசு மேல் நிலைப் பள்ளி துணை முதல்வர் ராஜேந்திரன் பேராசிரியர்கள் முத்துக்கண்ணு, உதயகுமார் போட்டியை நடத்தினர். புதுச்சேரி 6, காரைக்கால் 3, மாகி 2, ஏனாமில் இருந்து ஒருவர் கலந்து கொண்டு ஒளியின் பயன்பாடுகள் குறித்து பேசினர். மிஷன் வீதி இமாக்குலேட் பள்ளி 10 வகுப்பு மாணவி எழிலரசி தேர்ச்சி பெற்றார். அவருக்கு கல்வித் துறை இணை இயக்குனர் பார்த்தசாரதி பரிசு வழங்கினார். விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகம் சார்பில் ஜோதி மெஹரா மற்றும் விரிவுரையாளர் சுகுமார், ஆசிரியர்கள் பசுலுதீன், ரூபஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.