உள்ளூர் செய்திகள்

பாரதியார் பல்கலையில் விடைத்தாள்கள் எரிப்பு?

கோவை: பாரதியார் பல்கலையில் முறைகேடுகள் குறித்து தொடர் பேராட்டம் நடந்துவரும் நிலையில், பல்கலை வளாகத்தில் தேர்வு வினா, விடைத்தாள்கள் எரிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாரதியார் பல்கலையின் கீழ், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள, 108 கலை அறிவியல் கல்லுாரிகளில், லட்சக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். தவிர, பல்கலையில், 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பல்கலை மாணவர்களின் தேர்வு வினா, விடைத்தாள்கள் திருத்திமுடிக்கப்பட்டு, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்கலை வளாகத்தில் பழைய வினா, விடைத்தாள்கள் நேற்று எரிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த, 24ம் தேதி முதல் பல்கலையில் முறைகேடுகள் நடந்துவருவதாகக்கூறி, ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் தொடர் போராட்டம் நடத்திவரும் நிலையில், இச்சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிளாடிஸ் லீமா ரோஸிடம் கேட்டபோது, தேர்வு வினா, விடைத்தாள்கள் எதுவும் எரிக்கப்படவில்லை. மறுசுழற்சி செய்யமுடியாத உறைகள், காகிதங்களை மட்டுமே ஊழியர்கள் எரித்துள்ளனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்