உள்ளூர் செய்திகள்

உயர்கல்வி வளர்ச்சியில் இந்தியா முன்னிலை

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை கழக நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை சார்பில் சர்வதேச எழுத்தறிவு தினம் பல்கலை., வளாகத்தில் நடந்தது. துணைவேந்தர் சுப்பையா பேசியதாவது: மொத்த மக்கள் தொகையில் இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 74 சதவீதம். உயர்கல்வி வளர்ச்சியில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாம் இடம் வகிக்கிறது. உயர்கல்வி நிறுவனங்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஒரு நாட்டின் சமுதாய, பொருளாதார, விஞ்ஞானம், அரசியல் வளர்ச்சியானது எழுத்தறிவு விகிதத்தை பொறுத்து தான் அமைகிறது. இந்தியா எந்த துறையை எடுத்து கொண்டாலும் வளர்ச்சி பெற்றுள்ளது. எழுத்தறிவின் மூலம் வறுமை நீக்கம், குழந்தை திருமணங்களை ஒழித்தல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைகள் இறப்பை தடுத்தல், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துதல், ஆண், பெண் சமத்துவம் போன்ற சமூக பிரச்னைகளை எதிர்கொள்ள முடியும். இலவச கல்வி மூலம் தமிழகத்தில் எழுத்தறிவு சதவீதம் உயர்ந்துள்ளது, என்றார். திருச்சி இந்திய மேலாண்மை கழக தலைமை அறிவு அலுவலர் இளஞ்செழியன், பேராசிரியர் நாராயணமூர்த்தி, தகவல் அறிவியல் துறை பேராசிரியர் தனுஷ்கோடி பங்கேற்றனர். ஜெய்சங்கர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்