உள்ளூர் செய்திகள்

டிப்ளமோ நர்சிங் மாணவர் சேர்க்கை

கோவை: அரசு நர்சிங் பயிற்சி பள்ளியில் டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நேற்று நடந்தது. முதல் நாளில், 94 இடங்கள் நிரம்பின. தமிழகத்தில், 27 அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மூன்றாண்டு டிப்ளமோ நர்சிங் படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. இவற்றில், 2,200 இடங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு 9,400 பேர் விண்ணப்பத்திருந்தனர். இதற்கான கவுன்சிலிங் முடிந்த நிலையில், நேற்று மாணவர் சேர்க்கை நடந்தது. நடப்பாண்டில் கோவை அரசு மருத்துவக் கல்லுாரியில் 99 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. கவுன்சிலிங் முறையில் 94 இடங்கள் நிரம்பின. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்