உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர் விருது

திருப்பூர்: சிறந்த முறையில் கல்விச்சேவை புரிந்தமைக்காக, மாநகராட்சிமற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பணியாற்றும், 15 ஆசிரியர்களுக்கு, நேஷன் பில்டர் விருது வழங்கப்பட்டது. திருப்பூர் தெற்கு ரோட்டரி கிளப் சார்பில் நடந்த இவ்விழாவில்,ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் ஆசிரியர்கள் மகேஷ்குமார், கவுதம் குமார், செல்வராஜூ, ராஜேஷ், ரவி பால் ஜெம்ராஜ், சரவணன், சம்பத்குமார், கனகராஜா, சுரேஷ், அண்ணாதுரை, பிரம்ம சந்திரன், விசாலாட்சி, ஜான்சி ராணி, ஆனந்தன், ஸ்ரீதேவி ஆகிய, 15 பேர் விருது பெற்றனர். நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராமசாமி, ரோட்டரி மாவட்ட லிட்ரசி சேர்மன் செல்வன், துணை கவர்னர் ஜெயபால், மண்டல ஒருங்கிணைப்பாளர் நாகேஷ், தெற்கு ரோட்டரி கிளப் தலைவர் சுப்ரமணியம், செயலாளர் வதராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்