பல்கலை மாணவரின் சாதனை முயற்சி
மதுரை காமராஜ் பல்கலை எம்.பி.ஏ., மாணவர் சக்திவேல், 23. இவர் வாயில் கத்தியை கவ்வியவாறு 500 கிலோ பப்பாளி பழங்களை, 2 மணி நேரத்தில் கார்விங் (காய், கனி சிற்பம்) செய்து அசிஸ்ட் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியில் ஈடுபட்டார். பல்கலையில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு தொலை நிலைக்கல்வி இயக்குனர் பாலன் தலைமை வகித்தார்.டூரிசம் மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட் துறை தலைவர் கண்ணன், சமையல் வல்லுனர் ஸ்ரீநாத் முன்னிலை வகித்தனர். பிற்பகல் 12 மணி முதல் 2 மணிக்குள் வாயில் கத்தியை கவ்வியவாறு பப்பாளி பழங்களை கார்விங் செய்தார். இவரின் சாதனை முயற்சி அசிஸ்ட் புத்தக நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.