மாணவர் அறிவியல் சுற்றுலா துவக்கம்
அனைவருக்கும் கல்வி இயக்ககத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 32 கல்வி மாவட்டங்களிலும், நான்கு கட்டங்களாக மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று சுற்றுலா திட்டம் துவங்குகிறது. வரும் 12, 15 மற்றும் 19ம் தேதிகளில் நான்கு கட்டங்களாக, மாணவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். இன்று முதல் கட்ட சுற்றுலாவில், 200 மாணவர்கள், 40 ஆசிரியர்கள், பிர்லா கோளரங்கம் மற்றும் கிண்டி சிறுவர் பூங்காவை சுற்றிப் பார்க்க உள்ளனர். அதில், நகர்ப்புற நலிவடைந்த குடும்ப மாணவர்கள், ஆதிதிராவிட, சிறுபான்மையின மாணவர்கள் மற்றும் மாணவியருக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும்.