காமராஜ் பல்கலை தேர்வு அட்டவணை
தேனி: மதுரை காமராஜ் பல்கலை தொலைதூர கல்வியில் பதிவு எண் 15 ஏ என துவங்கும் முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு அக்., 26 முதல் நவ.,1 வரை தேர்வுகள் நடைபெறும். தேர்வு அட்டவணை பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., எம்.ஏ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மற்றும் பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு அட்மிஷன் நடந்து வருகிறது. கூடுதல் தகவல்களுக்கு 99520 12777, 80123 12777, 04546-262 345 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என முதன்மை தேர்வு அலுவலர்நாராயணபிரபு தெரிவித்தார்.