உள்ளூர் செய்திகள்

லண்டனில் குவியும் இந்திய மாணவர்கள்!

அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில், இந்தியர்கள் 3வது இடத்தில் உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. லண்டனில் சர்வதேச தரம் வாய்ந்த, உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் இருப்பதால், அமெரிக்கா, இந்தியா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஹாங்காங், கிரீஸ், நைஜீரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகளவில் மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வரிசையில் சீன மாணவர்கள் முதலிடத்தையும், அமெரிக்க மாணவர்கள் 2வது இடத்தையும், இந்திய மாணவர்கள் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். 2014ம் ஆண்டு நிலவரப்படி, லண்டன் பல்கலைகழகங்களில் படிக்கும் 1,06,000 வெளிநாட்டு மாணவர்களில், 13,640 சீன மாணவர்களும், 6,440 அமெரிக்க மாணவர்களும், 4,790 இந்திய மாணவர்களும் உள்ளதாக கணக்கெடுப்பு விவரம் தெரிவிக்கிறது. கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் வெளிநாட்டு மாணவர்கள் மூலம் இங்கிலாந்துக்கு 3 பில்லியன் பவுண்ட் வருமானம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்