இலவச சமஸ்கிருத பேச்சு பயிற்சி
கோவை: சமஸ்கிருத பாரதி சார்பில், இலவச சமஸ்கிருத பேச்சுப் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.புரம், புரந்தரதாசர் கலையரங்கில், காலை, 10:30 முதல் 12:30 மணி வரையிலும், மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரையிலும், வகுப்புகள் நடக்கின்றன. சாய்பாபாகாலனி நடுநிலைப்பள்ளி மற்றும் சிங்காநல்லுார் வெங்கடலட்சுமி மெட்ரிக் பள்ளியில் மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரையிலும் பயிற்சிகள் நடக்கின்றன. இதில், 10 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்கலாம். விபரங்களுக்கு, 94433 94367 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.