தூய்மையான பள்ளி விழிப்புணர்வு போட்டிகள்
புதுச்சேரி: துாய்மையான பள்ளி இயக்கம் விழிப்புணர்வு வலியுறுத்தி, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன, அனைவருக்கும் கல்வி இயக்கம், மாநில பயிற்சி மையம் இணைந்து, நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கான துாய்மையான பள்ளி இயக்கம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி, வினாடி வினா, ஓவியம், முழக்கம் எழுதுதல் மற்றும் கட்டுரைப் போட்டிகள் ஜவகர் சிறுவர் இல்லத்தில் நேற்று நடந்தது. நகர மற்றும் கிராமப்புற அரசு பள்ளி மாணவ, மாணவியர் 120 பேர் கலந்துக் கொண்டனர். பேச்சுப் போட்டியில் துாய்மை இந்தியா மாணவர்களின் பங்கு என்ற தலைப்பில் மாணவர்கள் பேசினர். ஜவகர் சிறுவர் இல்ல தலைமை ஆசிரியர் நந்தகுமார், மாநில பயிற்சி மைய விரிவுரையாளர் பூபதி, ஆசிரியர் குலசேகரன், ரவிச்சந்திரன், அசோக் நடுவர்களாக இருந்தனர். வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு, ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது.