மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு
பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ரெட்டியாரூரில், அரசு உதவி பெறும் என்.ஜி.என்.ஜி. மேல்நிலைப் பள்ளியின், தேசிய பசுமைப் படை சார்பில், டெங்கு காய்சல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தலைமை ஆசிரியர் கிட்டுசாமி தலைமை வகித்தார். கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் பழனிக்குமார், பரிதி ஆகியோர், டெங்கு காய்ச்சலின் அறிகுறி, தடுக்கும் முறை, சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பேண வேண்டியதன் அவசியம், நிலவேம்பு கஷாயம் தயாரித்து அருந்துவதன் பலன் குறித்து விளக்கினர்.