உள்ளூர் செய்திகள்

பல்கலை மாணவர்கள் போராட்ட முடிவு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் கல்வி உதவித் தொகை வழங்காததை கண்டித்து, நவ., 17 ல் மீண்டும் போராட்டம் நடத்த மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். பதிவு செய்யப்பட்ட பி.எச்டி., எம்.பில்., மாணவர்களுக்கு பல்கலை மானிய குழு (யு.ஜி.சி.,) சார்பில், 2013ம் ஆண்டு முதல் கல்வி உதவி தொகை (நான்- நெட் பெல்லோஷிப்) வழங்கப்படுகிறது. இப்பல்கலையில் எம்.பில்., மாணவர்களுக்கு ஜன., முதலும், பி.எச்டி., மாணவர்களுக்கு ஏப்., முதலும் இத்தொகை வழங்கப்படவில்லை. இதை கண்டித்து மாணவர்கள் சில நாட்களுக்கு முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். இரு நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக பதிவாளர் மற்றும் கன்வீனர் கமிட்டியினர் அவர்களிடம் உறுதி அளித்தனர். ஆனால் நேற்று வரை உதவி தொகை வழங்கப்படவில்லை. பல்கலை பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு, ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நிர்வாகி சுரேஷ்குமார் தலைமையிலும், பேராசிரியர் முருகேசன் முன்னிலையிலும் நடந்தது. நவ.,16 ல் சென்னை சென்று கல்வி உதவித் தொகை வழங்காதது குறித்து உயர்கல்வி செயலரிடம் விளக்கம் கேட்பது, நவ., 17ல் பல்கலை வளாகத்திற்குள் போராட்டம் நடத்துவது, என முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்