உள்ளூர் செய்திகள்

தெலுங்கானா; ரேனாக் சென்ற மாணவர்

தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர், துாபி பத்ரய்யா. இவர், தன் மாநிலத்தில் உள்ள மலையேற்ற பயிற்சி பள்ளியில் சேர்ந்து, 20 நாட்கள் பயிற்சி பெற்றார். பின், நவம்பரில் இமயமலை பகுதிக்கு சென்று, அங்குள்ள நிறுவனம் ஒன்றிலும் பயிற்சி எடுத்தார். இதையடுத்து, இம்மாதம் முதல் வாரத்தில், 31 பேர் குழுவினருடன், இமயமலையில், 17 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள ரேனாக் சிகரத்திற்கு ஏறத் துவங்கினார். சிகரத்தை அடைந்ததும், அங்கு தேசியக் கொடியை பறக்க விட்டார். விரைவில், 29 ஆயிரம் அடி உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கவும் திட்டமிட்டுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்