உள்ளூர் செய்திகள்

வெளிநாடு படிப்புகள்; வழிகாட்டுகிறது கல்வி

மதுரை: மதுரை கல்வி குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் செந்தில் கூறியதாவது: மதுரை கே.கே.நகர் கல்வி குழுமம் சார்பில் வாய்ஸ் டிரைனிங் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் என்ற புதிய பிரிவு துவங்கப்பட்டுள்ளது.தற்போது மாநிலம் முழுவதும் 25 கிளைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வெளிநாட்டில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவ மாணவி களுக்காக டோபல், ஐ.இ.எல்.டி.எஸ்., ஜி.ஆர்.இ., ஜிமேட், டி.ஓ.இ.ஐ.சி., ஜி.ஏ.சி.இ., பிராக்சிஸ் போன்ற ஆங்கில மொழிப் பயிற்சி மற்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் கல்வி உதவித் தொகை மற்றும் விசாவுடன் வெளிநாட்டில் உயர்கல்வி படிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இந்நிறுவனம் வழங்கும் சான்றிதழ்களால், 130 நாடுகளில் 9000 கல்லுாரிகளில் கல்வி உதவித் தொகையுடன் எளிதில் சேர்க்கை கிடைக்கும். வங்கி கடனுக்கு காத்திருக்க தேவையில்லை. இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன் படுத்திக்கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்