உள்ளூர் செய்திகள்

லட்சம் பேர் வெள்ளத்தால் வேலையிழப்பு!

நவம்பர் மற்றும் டிசம்பரில் பெய்த தொடர் மழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், துாத்துக்குடி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல தொழிற்சாலைகளில் வெள்ள நீர் புகுந்ததால், ஒரு மாதத்துக்கும் மேலாக அவை முடங்கின. சென்னை வந்த, மத்திய சிறு, குறு தொழிற்சாலைகள் துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, கல்ராஜ் மிஸ்ரா, அத்துறையின் செயலர் அனுாப் கே. புஜாரி ஆகியோர், 30க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுடன், வெள்ள பாதிப்பு பற்றி ஆலோசனை நடத்தினர். அப்போது, மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா, சமீபத்தில் பெய்த மழையால், 14 ஆயிரம் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என, அறிவித்தார். ஆனால், அதை விட அதிக அளவில், ஒரு லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அத்துறையினர் கூறுகின்றனர். வெள்ளம் காரணமாக, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், 14 ஆயிரம் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டன. மேலும், விழுப்புரம் மற்றும் துாத்துக்குடியில் பல ஆயிரம் தொழிற்சாலைகளும் இழப்பைச் சந்தித்து உள்ளன. மொத்தத்தில், 25 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன; ஒரு லட்சம் தொழிலாளர் வேலை இழந்துள்ளனர்.  சி.முத்துசாமி டான்ஸ்டியா தலைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்