ஒரிஜினல் மதிப்பெண் சான்று வினியோகம்
திருப்பூர்: பிளஸ் 2 தனித்தேர்வு எழுதியவர்களுக்கு, இன்று முதல், ஒரிஜினல் மதிப்பெண் சான்று, தேர்வு எழுதிய மையங்களில் வழங்கப்படுகிறது.கடந்த செப்., அக்., மாதங்களில், பிளஸ் 2 தனித்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு எழுதியவர்களுக்கான தற்காலிக சான்று, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள, அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்காலிக சான்றிதழ், மூன்று மாதத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதால், சென்னையில் இருந்து ஒரிஜினல் சான்று தருவிக்கப்பட்டுள்ளது; இன்று முதல், ஜன., 8 வரை பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வெழுதிய மையங்களுக்கு நேரில் சென்று, தலைமை ஆசிரியரை சந்தித்து, ஒரிஜினல் மதிப்பெண் சான்றை பெற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் சான்றிதழை பெறாதவர்கள், அதன்பின், அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என, அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு, கே.எஸ்.சி., அரசு பள்ளியில் மதிப்பெண் சான்று வழங்கப்படுகிறது.