வி.ஏ.ஓ., தேர்வுக்கு இலவச பயிற்சி
கோவை: தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள, வி.ஏ.ஓ., தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் துவங்கவுள்ளன. இத்தேர்வுகள், பிப்., 28ம் தேதி நடக்கவுள்ளது. இதில், முந்தைய தேர்வுகளின் வினாத்தாள்கள், தேர்விற்கான பாடக்குறிப்புகள் பயிற்சி முகாமில் தேர்வர்களுக்கு வழங்கப்படுவதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள தேர்வர்கள், வேலை வாய்ப்பு அலுவலகங்களை நேரடியாக அணுகி விண்ணப்பித்துக் கொள்ளலாம். மாவட்ட வேலைவாய்ப்புதுறை இயக்குநர் ஜோதிமணி கூறுகையில், தற்போது, குரூப்-2 தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு நடக்கிறது. இத்தேர்வுகள் முடிந்ததும், பிப்., முதல் வாரத்தில் வி.ஏ.ஓ., தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.