உள்ளூர் செய்திகள்

வேளாண் பல்கலையில் பயிற்சி முகாம்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையை சேர்ந்த, 40 விவசாயிகளுக்கு கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், நாம கிரிப்பேட்டை ஒன்றியத்தில் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் (அட்மா), 40 விவசாயிகளுக்கு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில், மூன்று நாட்கள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. இதில், பயிர் சுழற்சி மற்றும் நன்மை பயக்கும் பூச்சிகள், நுண்ணுயிரிகள் மூலம் நோய் மற்றும் பூச்சிக்கட்டுப்பாடு, வரப்பு ஓரப்பயிர்கள் குறித்து விளக்கப்பட்டது.மேலும், ஒட்டுண்ணிகள், பஞ்ச காவ்யா, மண்புழு உரம் தயாரித்தல், ஒளிப்பொறி, ஒட்டும் பொறி, இன கவர்ச்சி பொறி மூலம் நோய் மற்றும் பூச்சிக் கட்டுப்பாடு ஆகியவை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்