தங்களது துறையில் புதுமை படையுங்கள்!
வெம்பக்கோட்டை: மாணவர்கள் ஏதேனும் புதுமை படைத்து நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டுசெல்ல, சென்னை அண்ணா பல்கலை ஆராய்ச்சி துறை இயக்குனர் ஜெயவேல் கேட்டுகோண்டார். சிவகாசி ரெங்கநாயகி வரதராஜ் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், பட்டங்களை வழங்கிய அவர் பேசியதாவது: மாணவர்கள் பாடப்புத்தங்களுடன் இல்லாமல் பல்வேறு துறைசார்ந்த புத்தங்களை கற்று தங்களுடைய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய துறையில் ஏதேனும் புதுமை படைத்து அதன் மூலம் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டுசெல்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும், என்றார். கல்லூரி தலைவர் கேசவன் தலைமை வகித்தார். தாளாளர்பிருந்தா முன்னிலை வகித்தார். முதல்வர் இளங்குமரன் வரவேற்றார். 90 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்.