உள்ளூர் செய்திகள்

பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டம்

பாகூர்: அரங்கனுார் அரசு தொடக்கப்பள்ளியில், மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி, பெற்றோர், ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடந்தது. அரங்கனுாரில் உள்ள மூன்று அங்கன்வாடி மையங்களில் நடந்த கூட்டத்தில், தலைமையாசிரியர் சத்தியமூர்த்தி, அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து, அரசு பள்ளிகளில் உள்ள சிறப்புகள், சி.பி.எஸ்.சி., கல்வித்திட்டம் குறித்து பெற்றோர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.ஆசிரியர்கள் நாகராஜன், முத்துகுமரன், ஆகியோர் 2016--17ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்து பதிவு செய்தனர். ஏற்பாடுகளை அங்கன்வாடி பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்