வேதியியல் தொழில் நுட்ப கருத்தரங்கு
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை.,தொழிலக வேதியியல், உயிரி மின்னணு மற்றும் உயிரி உணர்விகள், நானோ அறிவியல் தொழில் நுட்பம் ஆகிய துறைகள் இணைந்து நடத்திய, வேதியியல் தொழில் நுட்பத்தின் முதன்மை பகுதி குறித்த கருத்தரங்கு பட்டமளிப்பு விழா கருத்தரங்கு அறையில் நடந்தது. துணைவேந்தர் சுப்பையா தலைமை வகித்தார். லண்டன் பாத் பல்கலை வேதியியல் பேராசிரியர் பிராங்க் மார்க்கன், தாய்லாந்து மஹிடால் பல்கலை உதவி பேராசிரியர் டோம்சங் ஸ்ரிகிரின் பேசினர். அழகப்பா பல்கலை உயிரி மின்னணு மற்றும் உயிரி உணர்விகள் துறை தலைவர் சேகர் வரவேற்றார். வேதியியல் துறை தலைவர் மணிசங்கர் ஏற்பாடுகளை செய்திருந்தார். நானோ தொழில் நுட்ப துறை தலைவர் குருநாதன் நன்றி கூறினார்.