வள்ளலார் பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு
சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்சசசி நடந்தது. வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மன்ற நிர்வாகிகள் வைத்திலிங்கம், நாராயணன், பாலு முன்னிலை வகித்தனர். வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார். இதில், 100 சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் அணிவகுப்பு நடத்தினர். சங்கராபுரம் சட்ட மன்ற தொகுதி துணை தேர்தல் அலுவலர் திருநாவுக்கரசு சிறப்புரை நிகழ்த்தினார். ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி, ஆசிரியைகள் குமாரி, சுமதி, அருணா, வசந்தி ஆகியோர் பேசினர். தலைமை ஆசிரியை வள்ளி நன்றிகூறினார்.