மாணவர் திறன் மேம்பாடு பயிற்சி
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில், மாணவர் திறன் மேம்பாட்டில் ஆற்றலை வெளிப்படுத்தும் பயிற்சி திட்ட நிகழ்ச்சி நடந்தது. என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி வரவேற்றார். தமிழ்நாடு ஐசிடி அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி சிவக்குமார், டி.வி.எஸ்., நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் கோவைச் செல்வன், காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சடகோபன் மாதவன் ஆகியோர் பேசினர். கல்லுாரியின் இயக்குனர் (கல்வி) விஜயரங்கன், இயக்குனர் (மாணவர்நலன்) பழனிச்சாமி, முதல்வர் ராம கிருஷ்ணன், துணை முதல்வர் ரத்தினவேல் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.