கோடையில் மாணவர்கள் வாய்க்காலில் குதியாட்டம்
கரூர் மாவட்டத்தில், 102 டிகிரி பாரன்ஹீட்க்கும் மேல் வெயில் தாக்கம் நாள்தோறும் அதிகம் உள்ளது. டெக்ஸ் தொழிலாளர்கள், கொசுவலை தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், பஸ்பாடி கட்டும் தொழிலாளர்கள் கூலி வேலைக்குச் செல்பவர்கள் பெரிதும் தவிக்கின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் குளித்து மகிழ்ந்தும், குழந்தைகள் வாய்க்காலில் குதியாட்டம் போட்டு மகிழ்ந்து வருகின்றனர். குறிப்பாக பிள்ளபாளையம் வாய்க்காலில் மாணவ, மாணவியர் விடுமுறை முன்னிட்டு குளித்து மகிழ்கின்றனர்.