கோடை கால பயிற்சி முகாம்
மதுரை: மதுரை சின்மயா மிஷனில் மே 1 - 8 வரை குழந்தைகளுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடக்கிறது. காலை 9.30 மணி - மதியம் 3.30 மணி வரை நடக்கும் இம்முகாமில் யோகா, நற்பண்பு கதைகள், வேத மந்திரங்கள், பஜனை, கைவினைப் பொருட்கள் செய்யும் முறை, விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 7 - 13 வயது வரை உள்ள குழந்தைகள் இம்முகாமில் பங்கேற்கலாம். நிறைவு நாளில் குழந்தைகள் தங்கள் தாய்க்கு பாத பூஜை செய்யும் மாத்ரு பூஜை நிகழ்ச்சி நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்யலாம். தொடர்புக்கு 90942 70623.