பீகார் பள்ளி குண்டுவைத்து தகர்ப்பு
ஜமுய்: பீகாரின் ஜமுய் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றை நக்சலைட்கள் குண்டுவைத்து தகர்த்துள்ளனர். இப்பள்ளியில் ஏப்ரல் 24ம் தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறுவதாக இருந்தது. தேர்தலை சீர்குலைப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.