மாணவர் சேர்க்கைக்கு நோட்டீஸ் வினியோகம்
புதுச்சேரி: அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி குருசுக்குப்பம் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் துண்டு பிரசுரம் வழங்கினர். குருசுக்குப்பத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கினர்.நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் சசி தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியர்கள் மக்களிடம் பள்ளியின் சிறப்பு அம்சங்களை விளக்கி கூறினர். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் பாலமுருகன், சரிதா, ஆதிரை, டிரேசி வெரோனிக்கா, இலக்கியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.