உள்ளூர் செய்திகள்

மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அறிவிப்பு

மதுரை: மதுரை மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் சீனிவாசமூர்த்தி தெரிவித்துள்ளதாவது: மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சிறுபான்மையற்ற மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ் நுழைவு வகுப்புகளில் 25 சதவீதம் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 18 வரை வழங்கப்படும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மே 20ல் நிராகரிப்பு விவரம் வெளியிடப்படும். ஒரே பள்ளிக்கு கூடுதல் விண்ணப்பங்கள் வரப்பெற்றால், பெற்றோர் முன்னிலையில் மே 23ல் &'ரேண்டம்&' முறையில் மாணவர் தேர்வு நடக்கும், என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்