உள்ளூர் செய்திகள்

வாக்காளர் விழிப்புணர்வு மாணவர்கள் பேரணி

கோவை: சட்டசபை தேர்தலில், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று வி.எல்.பி., கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணி, மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி முதல் அவிநாசி சாலை வ.உ.சி., பூங்கா வரை நடைபெற்றது. இந்த பேரணியை, வி.எல்.பி., கல்லுாரியின் முதல்வர் ராஜ்குமார் துவக்கி வைத்தார். இதில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்