உள்ளூர் செய்திகள்

தேர்தல் பணி; ஆசிரியர்கள் கோரிக்கை

சங்கராபுரம்: தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தேர்தல் அதிகாரியிடம், கோரிக்கை விடுத்தனர். சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயற்சி முகாம் நடந்தது. இதில் திண்டிவனம், வானுர், விக்ரவாண்டி, மைலம், செஞ்சி ஆகிய சட்டசபை தொகுதியை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். அரசு விதிமுறைக்கு உட்பட்டு பெண் ஊழியர் களை 20 கி.மீ., துாரதிற்கும், ஆண் ஊழியர்களை 50 கி.மீ., துாரத்திற்கு உட்பட்ட பகுதியிலும் தேர்தல் பணியில் நியமிக்க வேண்டுமென, சங்கராபுரம் தொகுதி தேர்தல் அலுவலர் ராமதாசிடம், கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்