பல்கலையில் வரலாறு துறை துவக்கம்
பாரதியார் பல்கலையில் இக்கல்வியாண்டு முதல் முதுநிலை படிப்புக்கு வரலாறு மற்றும் சுற்றுலாவியல் துறை புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இப்படிப்பில் சேர்க்கை புரிய மாணவர்கள், www.b-u.ac.in என்ற பல்கலை இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அல்லது பல்கலையில் நேரடியாக பெற்றும் விண்ணப்பிக்கலாம். பூர்த்திசெய்த விண்ணப்பங்களை, ஜூன், 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும். பல்கலையில் அண்ணா ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் மற்றும் பல்கலை இணைந்து ஆட்சிப்பணி தேர்வுக்கு பயிற்சி அளித்து வரும் நிலையில், இத்துறை மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் சேர முக்கியத்துவம் வழங்கப்படும் என, துணைவேந்தர் கணபதி தெரிவித்துள்ளார். சேர்க்கை விபரங்களுக்கு, 98420 98696 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.