மாணவிக்கு இலவச பஸ் பாஸ்
திருப்பூர்: ஊத்துக்குளியை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன்; மனைவி வள்ளி. இத்தம்பதிக்கு, சுதாபிரியா,16 என்ற மகள் உள்ளார். மாற்றுத்திறனாளியான இவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 345 மதிப்பெண் பெற்று,தேர்ச்சி பெற்றார். ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்துள்ளார். மாற்றுத்திறனாளிக்கான மாதாந்திர உதவித்தொகை கோரி, தனது தாயார் வள்ளியுடன், சுதாபிரியா, நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு வந்திருந்தார்; கலெக்டர் ஜெயந்தியிடம் மனு அளித்தார். மனுவை பெற்ற கலெக்டர், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்; அரசு பஸ்சில் பள்ளிக்குச் செல்ல மாணவிக்கும்; அவரை அழைத்துச் செல்ல, தாயார் வள்ளிக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.