உள்ளூர் செய்திகள்

மருத்துவ பல்கலைக்கு எதிராகடாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், முதுநிலை மருத்துவ படிப்புக்கு தேர்வு எழுதியோரில், 111 பேர் தோல்வி அடைந்துள்ளனர். இதற்கு, டாக்டர்கள் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதும், தோல்வி அடைந்தோரின் விடைத்தாள்களை, விதிமுறைப்படி பல்கலை மறு திருத்தம் செய்யாததுமே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி தான் திருத்தம் செய்யப்பட்டது. 40 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தோரின் விடைத்தாள்கள் மறு திருத்தம் செய்யப்பட்டன; வேறு ஏதும் செய்ய முடியாது என, பல்கலை விளக்கம் அளித்துள்ளது. பல்கலை தவறை மூடி மறைக்க முயற்சிப்பதாகவும், தோல்வி அடைந்தோரின் அனைத்து விடைத்தாள்களை மறு திருத்தம் செய்யக்கோரியும், வரும், 13ம் தேதி, சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, சமூக சமத்துவத்துக்கான டாக்டர் சங்கம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்