திண்டுக்கல் பேராசிரியருக்கு கவுரவ விருது
புதுடில்லியில் உள்ள அகில உலக வயது வந்தோர் மற்றும் வாழ்க்கை முழுமைக்கான கல்வி நிறுவனம், வயது வந்தோர் கல்வித்துறையில் சேவை செய்தவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதை வழங்குகிறது. இந்த விருது பெற சீனி நடராஜன் உள்ட ஏழு பேர் தேர்வு பெற்றுள்ளனர். அக்டோபர் 13ம் தேதி டில்லியில் நடைபெறும் விழாவில் இவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக யுனெஸ்கோ ஒப்பீட்டு கல்வி ஆராய்ச்சி மைய இயக்குநர் டபிள்யு. ஜே. மோர்கன் கவுரவ விருது வழங்குகிறார்.