ஆன்லைன் சதுரங்கம் அசத்திய மாணவர்கள்
திருப்பூர்: திருப்பூர் சுப்பையா சென்ட்ரல் பள்ளி, சிங்கப்பூரின் கோ-செக்மேட் இணைந்து, சிவசுப்ரமணியம் நினைவு ஆன்லைன் சதுரங்க போட்டி நடந்தது.பள்ளிகளுக்கு இடையேயான முதல் ஆன்லைன் போட்டியில் எட்டு, 12 மற்றும், 16 வயது என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. 77 பேர் பங்கேற்றனர். சிங்கப்பூர் கோ-செக்மேட் மனித வள அதிகாரிகள் வள்ளிக்கண்ணு, பிரவீன் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.எட்டு வயது பிரிவில் முதலிடத்தை ஸ்பிரிங் மவுண்ட் பப்ளிக் பள்ளி மாணவர் விஜய்ஆதித்தியன், 12 வயது பிரிவில் முதலிடத்தை கேந்திரியா வித்யாலயா பள்ளி மாணவர் கார்த்திகேசவா பெற்றார். 16 வயது பிரிவில் நசரேக் கான்வெண்ட் பள்ளி வினந்தி முதலிடம் பெற்றார். பள்ளி தாளாளர் சுகுமாரன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, இ-சான்றிதழ் வழங்கினார்.