உள்ளூர் செய்திகள்

என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு விண்ணப்பிக்க அவகாசம்

சென்னை: அண்ணா பல்கலையில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் சேருவதற்கு விண்ணப்பிக்க, வரும், 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிள்ளைகளுக்கு, தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த மாணவர் சேர்க்கை, &'ஆன்லைன்&' வழியாக மேற்கொள்ளப்படுகிறது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஆகஸ்ட், 21ல் துவங்கி, இன்றுடன் முடிவதாக இருந்தது. இந்நிலையில், வரும், 30ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து, அண்ணா பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்