இணைய பாதுகாப்பு கொள்கை வெளியீடு
சென்னை: தமிழக அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், &'வீடியோ கான்பரன்ஸ்&' வழியே, &'கனெக்ட் - 2020&' மாநாடு, நடந்தது.மாநாட்டில், &'தமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை- - 2020, தமிழ்நாடு நம்பிக்கை இணைய கொள்கை- -2020, தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்கை- - 2020&' ஆகியவற்றை, முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்டார்.மாநாட்டில், அவர் பேசியதாவது:உலகம் முழுதும், கொரோனா பேரிடர் காரணமாக, கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு, கொரோனா நோய்க்கு எதிராக, அயராது பணியாற்றி வருகிறது.கடந்த ஆண்டு நடந்த, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான திட்டங்களில், 81 திட்டப்பணிகள் நிறைவடைந்து, உற்பத்தி துவக்கப்பட்டுள்ளது;191 திட்டப்பணிகள், பல்வேறு நிலையில் உள்ளன. தகவல் தொழில்நுட்ப துறையில், தமிழகம்முன்னணியில் உள்ளது. தமிழகத்தை, &'கண்டுபிடிப்பு மையம் மற்றும் அறிவு திறன் தலைநகர்&' ஆக மாற்ற, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு, முதல்வர் பேசினார்.மாநாட்டில், இந்த ஆண்டிற்கான, சிறந்த தொழில் முனைவோருக்கான விருது உட்பட, பல்வேறு விருதுகளை, முதல்வர் வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர் உதயகுமார், தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.