அறிவியல் கண்டுபிடிப்பு மோடி பெருமிதம்
புதுடில்லி: &'&'அறிவியல், ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது,&'&' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார். &'வைபவ்&' எனப்படும், &'வைஷ்விக் பாரதிய வைக்னாகிக்&' அமைப்பின் மாநாடு துவங்கியது. இதில், 55 நாடுகளில் வசிக்கும், இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.இம்மாதம், 31 வரை நடக்கும் இந்த மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி, &'வீடியோ கான்பரன்ஸ்&' வழியாக துவக்கி வைத்து பேசியதாவது:இந்திய கலாசாரம், அறிவியலுடன் நெருக்கமாக தொடர்பு உடையது. விண்வெளி ஆய்விலும், கணிதத்திலும், நம் முன்னோர் சிறந்து விளங்கினர். பல வரலாற்றுச் சிறப்பு மிக்க கேள்விகளுக்கு, நம் முன்னோர் தீர்வு கண்டுள்ளனர். பூஜ்ஜியத்தை பற்றி பேசும் போது, உலகம் முழுவதும் இந்தியாவை பற்றி பேசும்.கொரோனா பரவல் காலத்தில், உலக நலனை கருத்தில் வைத்தே, சுயசார்பு இந்தியா இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. சுயசுார்பு இந்தியா இயக்கம் வெற்றி பெற, நீங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். விண்வெளி ஆய்வு திட்டங்களில், இந்தியாவில் சமீபத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம், கல்வி மற்றும் தொழில் துறைகளில், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.அறிவியல், ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளை, மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. விவசாயிகளுக்கு உதவும் வகையில், விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என, உங்களிடம் வேண்டுகிறேன். நம் விவசாய விஞ்ஞானிகளின் கடுமையான ஆராய்ச்சிகளின் பயனாக, நாட்டில் பருப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. உணவு தானியங்கள் உற்பத்தியில், நாம் சாதனை படைத்துள்ளோம். இந்த சாதனையை மேம்படுத்துவதற்கான ஆய்வுகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.தடுப்பூசிகளை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா என்பதில், நாம் பெருமை கொள்ள வேண்டும். உள்நாட்டிலேயே தடுப்பூசிகளை தயாரிக்கும் திட்டங்களை, மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.கடந்த, 2014ல் நான்கு புதிய தடுப்பூசிகளை, இந்தியா அறிமுகப்படுத்தியது. இதில், வயிற்று போக்கால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்கும் தடுப்பூசி மிகவும் முக்கியமானது. 2025ம் ஆண்டுக்குள், இந்தியாவில் இருந்து காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும். உலகையே உலுக்கிவரும் கொரோனாவுக்கு எதிரான, தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில், நம் மருத்துவ குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.