ஆன்லைன் வகுப்புகளுக்கு தீபாவளி விடுமுறை
தமிழகத்தில், ஏழு மாதங்களாக, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி &'டிவி&'யில் பாடங்கள் ஒளிபரப்பாகின்றன.இந்நிலையில், வரும், 14ம் தேதி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வரும், 14ம் தேதி குழந்தைகள் தினம் என்பதால், அன்று மட்டும் வகுப்புகள் இல்லாமல், &'ஆன்லைனில்&' பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுக்கு, தனியார் பள்ளிகள் ஏற்பாடு செய்துள்ளன.