உள்ளூர் செய்திகள்

மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கப்படுமா?

அவிநாசி: பல பள்ளிகளில், வினியோகிக்கப்படாமல் உள்ள இலவச சைக்கிள் மாணவர்களுக்கு, மீண்டும் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மாநில அரசின் சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த,ஜன., பிப்., மாதம் பல பள்ளிகளில், இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. பல மாவட்டங்களில், அந்தந்த பகுதியில் உள்ள அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் மூலம், விழா நடத்தி, தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன், சைக்கிள் வினியோகத்தை முடிக்க திட்டமிடப்பட்டு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இருப்பினும், பல இடங்களில் சைக்கிள் வழங்கப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இலவச சைக்கிள் மாணவர்களுக்கு மீண்டும் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்