இயக்குனர் பதவி: தினகரன் கோரிக்கை
சென்னை: &'பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதவியை ரத்து செய்யும் பிரச்னையில் தமிழக அரசு நிதானமாக செயல்பட்டு உரிய முடிவை எடுக்க வேண்டும்&' என அ.ம.மு.க. பொதுச் செயலர் தினகரன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதவியை ரத்துசெய்து அவருக்கான அதிகாரத்தை பள்ளி கல்வித்துறை கமிஷனரிடம் ஒப்படைப்பது என்ற தமிழக அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் அதிருப்தி குரல்கள் எழுந்திருக்கின்றன.அரசு நிர்வாகத்தில் காலத்திற்கு ஏற்ப சீர்திருத்தங்களை செய்வது அவசியம் என்றாலும் அவற்றை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வது சரியாக இருக்காது. துறை சார்ந்தவர்களிடம் முறையாக கலந்து ஆலோசித்து அதற்கேற்ப முடிவுகளை எடுக்க வேண்டும்.அத்தகைய முடிவுகளை எடுத்து செயல்படுத்தும் போது முன்னர் இருந்ததை விட நிர்வாகப் பணிகள் சிறப்பாக அமைய வேண்டுமே தவிர அந்த துறையில் இருப்போருக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது. எனவே இப்பிரச்னையில் தமிழக அரசு நிதானமாக செயல்பட்டு உரிய முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.