உள்ளூர் செய்திகள்

இணையவழியில் நடந்த தொழில்நுட்ப கருத்தரங்கு

கோவை: தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (என்.டி.ஆர்.எப்., ) மற்றும் கோவை கே.சி.டி., தொழில்நுட்ப கல்லுாரி சார்பில், &'புதுமையான அகாடமிக் திட்டங்கள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான வாய்ப்புகள்&' என்ற தலைப்பில், இணையவழி கருத்தரங்கு நடத்தப்பட்டது.என்.டி.ஆர்.எப்., தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தலைமை வகித்து, மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், புதிய கண்டுபிடிப்புகளின் தேவை, சந்தைப்படுத்துதல், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, கள ஆய்வுகள், ஆராய்ச்சிகளின் அவசியம் உள்ளிட்டவை குறித்து, வல்லுனர்கள் விளக்கம் அளித்ததுடன், மாணவர்களின் சந்தேகங்களுக்கும் பதில் அளித்தனர்.இக்கருத்தரங்கில், என்.டி.ஆர்.எப்., முன்னாள் இயக்குனர் ராமச்சந்திரா, இந்நாள் இயக்குனர் தில்லிபாபு, கல்லுாரி துணைத்தலைவர் இந்து முருகேசன், முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ் உட்பட, 800க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்