தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை
கரூர்: &'&'நீதிமன்ற உத்தரவை மீறி, கூடுதல் கட்டணம் வசூலித்தால், தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,&'&' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.கரூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:கொரோனா தொற்று குறைந்த பின், பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க ஏதுவாக, பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக, பள்ளி திறப்பதற்கான கட்டமைப்பு, ஆசிரியர்கள் இரண்டு கட்ட தடுப்பூசிகளும் செலுத்தி கொண்டனரா என்பது குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில், &'75 சதவீத கல்வி கட்டணம் வசூலித்து கொள்ளலாம்; அதையும், 30 சதவீதம் ஒரு தவணையாகவும், 45 சதவீதம் ஒரு தவணையாகவும் வசூலிக்கவே கூறப்பட்டுள்ளது.இதை மீறி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு, &'நீட்&' தேர்வு தொடர்பாக குழு அமைத்துள்ளது. அக்குழுவின் முடிவு அடிப்படையில், அரசு முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.