உள்ளூர் செய்திகள்

நடப்பாண்டில் ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

பெங்களூரு: இரண்டாண்டுகளாக ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் நடத்த, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.ஆண்டுதோறும் மே மாதத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான பணியிடமாற்றம், கவுன்சலிங் அடிப்படையில் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும், 15 சதவீதம் ஆசிரியர்கள் மாற்றம் செய்யப்படுவர். ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் நடத்தப்படும். 2019ல் லோக்சபா தேர்தலால் இடம் மாற்றம் நடத்தப்படவில்லை.கடந்தாண்டு கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டது. இடம் மாறுதலை எதிர்பார்த்து காத்திருந்த பலரும் ஏமாற்றத்துடன் உள்ளனர். ஆசிரியர்கள் தொலை துாரத்திலிருந்து பள்ளிக்கு சென்று வருவதால் பலரும் இடம் மாற்றத்துக்கு விண்ணப்பித்தனர். தற்போது கொரோனாவால், பள்ளிக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இப்பிரச்னைகளை தவிர்க்க, நடப்பாண்டில் தேர்தல் நடத்துவதற்கு அரசு பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. நடப்பாண்டில் இடம் மாற்றம் செய்வதற்கு அனுமதி அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை, விரைவில் வெளியிடுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்