உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி.,க்கு நான்கு உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உட்பட, நான்கு பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், அருள்மதி, ராஜ்மரியசூசை ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.முனியநாதன், தற்போது தொழிலாளர் நலத்துறை கமிஷனராக உள்ளார். ஜோதி சிவஞானம், சென்னை பல்கலை பொருளியல் துறைத் தலைவராக உள்ளார். முனைவர் அருள்மதி, சென்னை, ராயப்பேட்டையில் வசித்து வருகிறார். பாதிரியார் ராஜ்மரியசூசை, ஏற்காட்டை சேர்ந்தவர்.இவர்கள் இப்பதவியில், ஆறு ஆண்டுகள் அல்லது, 62 வயது வரை இருப்பர். இதற்கான அரசாணையை, மனிதவள மேலாண்மைத் துறை செயலர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்