உள்ளூர் செய்திகள்

பள்ளி திறப்பு குறித்து ஆலோசனை

சென்னை: பள்ளிகள் திறப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வெளியீடு உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன், பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ், நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.தமிழகத்தில் பள்ளிகளை திறந்து, மீண்டும் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என, தனியார் பள்ளிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துஉள்ளது. அதேபோல், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வெளியிடுவதற்கான பணிகளும் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.இதுகுறித்து முடிவு செய்வதற்கு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன், பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ், நாளை ஆலோசனை நடத்த உள்ளார். &'வீடியோ கான்பரன்ஸ்&' வழியாக, இந்த கூட்டம் நடக்க உள்ளது. பள்ளி கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா, கமிஷனர் நந்தகுமார், இயக்குனர்கள் கண்ணப்பன், உஷாராணி, கருப்பசாமி, பழனிசாமி, பாடநுால் கழக உறுப்பினர் செயலர் நாகராஜமுருகன் மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்க உள்ளனர்.ஒருங்கிணைந்த கல்வி திட்ட பணிகள், பாடப்புத்தகம், மாணவர் சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பள்ளி திறப்பு உள்ளிட்ட பிரச்னைகள் பேசப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்