உள்ளூர் செய்திகள்

கேட் தேர்வு ரத்து செய்யப்படாது

ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இத்தேர்வு நடந்த மையங்களில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டு அதனால் மாணவர்கள் பலர் குழப்பத்திற்கு ஆளாயினர். எனவே, இதுகுறித்து மத்திய மனித வள அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளை அகமதாபாத் ஐ.ஐ.எம்., இயக்குநர் பேராசிரியர் சமீர் பருவா, பெங்களூர் ஐ.ஐ.எம்., இயக்குநர் பங்கஜ் சந்திரா மற்றும் சில பேராசிரியர்கள் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பை அடுத்து கேட் கமிட்டி, இத்தேர்வு ரத்து செய்யப்படாது என்று தெரிவித்துள்ளது. தற்போது நடந்த தேர்வு முறை குறித்து முழுமையாக ஆராயப்பட்டு, இந்த முறை நடந்த தேர்வுகளில் ஏற்பட்ட கோளாறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பேராசிரியர் சமீர் பருவாகுறிப்பிட்டார். நவம்பர் 27ம் தேதியிலிருந்து டிசம்பர் 8ம் தேதி வரை நடந்த கேட் ஆன்லைன் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்காக ஜனவரி மத்தியில் புதிதாக தேர்வு நடத்தப்பட உள்ளது. கேட் தேர்வு எழுதுவதற்காக 2.4 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். 2.16 லட்சம் பேர் இதுவரை இத்தேர்வை எழுதியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்